தருமபுரி – ஏப்ரல் 07:
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்–2026 முன்னிட்டு, கல்வி கடன் மற்றும் விவசாய பயிர் கடன் ரத்து தொடர்பாக திமுகவும் தனது தேர்தல் அறிக்கையில் அறிவிக்க வேண்டும் என காங்கிரஸ் ஜனநாயக மக்கள் கட்சி மாநிலத் தலைவர் எம்.எஸ். புத்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.
தருமபுரியில் வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் காங்கிரஸ் சேவாதள மாவட்டத் தலைவராகவும், இளைஞர் காங்கிரஸ் மாவட்டத் தலைவராகவும் பணியாற்றிய எம்.எஸ். புத்தன், காங்கிரஸிலிருந்து விலகி “காங்கிரஸ் ஜனநாயக மக்கள் கட்சி” என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், “2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் கல்வி கடன் மற்றும் விவசாய பயிர் கடன் ரத்து செய்யப்படும் என அறிவித்துள்ளது. அதேபோல் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினும் இதுகுறித்து தெளிவான அறிவிப்பை வெளியிட வேண்டும்” என்று அவர் வலியுறுத்தினார். அதனைத் தொடர்ந்து, “திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு நகைக் கடனையும் ரத்து செய்ய வேண்டும்” எனவும் காங்கிரஸ் ஜனநாயக மக்கள் கட்சி சார்பில் கோரிக்கை விடுத்துள்ளார்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

