தருமபுரி – ஏப்ரல் 08:
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்–2026 முன்னிட்டு, தருமபுரி சட்டமன்ற தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் டாக்டர் இளங்கோவனை ஆதரித்து திமுக சார்பில் தீவிர வாக்கு சேகரிப்பு நடைபெற்றது. தருமபுரி நகர திமுக நகர செயலாளர் நாட்டான் மாது தலைமையில், நகரின் அனைத்து வார்டுகளிலும் கூட்டணி கட்சியினர் இணைந்து வீடு தோறும் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
இந்த வாக்கு சேகரிப்பில் தருமபுரி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் டி. செங்குட்டுவன், நகர துணைச் செயலாளர் வ. முல்லவேந்தன், கழக பேச்சாளர் டி.ஏ. ரவி, இளைஞர் அணி துணை அமைப்பாளர் அசோக்குமார் கோவிந்தன், மாவட்ட துணை செயலாளர் ரேணுகாதேவி, சுருளிராஜன், வெல்டிங் ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் தேமுதிக மாவட்ட செயலாளர் குமார், நகர செயலாளர் சுரேஷ் மற்றும் திமுக, கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர் பொதுமக்களிடம் நேரடியாக சந்தித்து ஆதரவு கோரி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

