Type Here to Get Search Results !

தருமபுரி தொகுதியில் தமிழக வெற்றி கழக வேட்பாளர் எம். சிவம் வேட்புமனு தாக்கல் செய்தார்.


தருமபுரி – ஏப்ரல் 06:


தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்–2026 முன்னிட்டு, தருமபுரி சட்டமன்ற தொகுதியில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் எம். சிவம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். இதனை முன்னிட்டு, கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் எம். சிவம் உற்சாகமான ஊர்வலமாக தருமபுரி நகரின் முக்கிய சாலைகள் வழியாக வந்தார். கட்சி கொடிகள், முழக்கங்கள், மேளதாளம் ஆகியவற்றுடன் நடைபெற்ற இந்த ஊர்வலம் தேர்தல் களத்தில் கவனம் ஈர்த்தது.


பின்னர், தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை சென்றடைந்த அவர், தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தனது வேட்புமனுவை அதிகாரப்பூர்வமாக தாக்கல் செய்தார். இந்த நிகழ்வில் தமிழக வெற்றி கழகத்தின் பல்வேறு நிலை நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies