தருமபுரி – ஏப்ரல் 09:
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்–2026 முன்னிட்டு, தருமபுரி மாவட்டத்தில் வேட்புமனு தாக்கல், நிராகரிப்பு மற்றும் வாபஸ் பெறுதல் ஆகிய செயல்முறைகள் முடிவடைந்த நிலையில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்தம் 144 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில் 25 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, 105 பேர் செல்லுபடியாக அறிவிக்கப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து, ஏப்ரல் 7, 8, 9 ஆகிய தேதிகளில் நடைபெற்ற மனு வாபஸ் பெறுதல் செயல்முறையில் மொத்தம் 22 பேர் போட்டியிலிருந்து விலகியுள்ளனர். இதனால், தற்போது தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் 83 வேட்பாளர்கள் இறுதி போட்டியில் உள்ளனர்.
தொகுதி வாரியான விவரம்:
- பாலக்கோடு (57)
- மொத்த மனுக்கள்: 31
- நிராகரிப்பு: 7
- தகுதியானவை : 22
- இறுதி வேட்பாளர்கள்: 14
- பென்னாகரம் (58)
- மொத்த மனுக்கள்: 32
- நிராகரிப்பு: 6
- தகுதியானவை : 25
- இறுதி வேட்பாளர்கள்: 22
- தருமபுரி (59)
- மொத்த மனுக்கள்: 36
- நிராகரிப்பு: 4
- தகுதியானவை : 26
- இறுதி வேட்பாளர்கள்: 19
- பாப்பிரெட்டிப்பட்டி (60)
- மொத்த மனுக்கள்: 23
- நிராகரிப்பு: 5
- தகுதியானவை : 15
- இறுதி வேட்பாளர்கள்: 14
- அரூர் (61 – தனி)
- மொத்த மனுக்கள்: 22
- நிராகரிப்பு: 3
- தகுதியானவை : 17
- இறுதி வேட்பாளர்கள்: 14
மொத்த நிலவரம்:
- தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள்: 144
- நிராகரிப்பு: 25
- தகுதியானவை : 105
- வாபஸ் பெற்றோர்: 22
- இறுதி வேட்பாளர்கள்: 83 பேர்
இதனால், தருமபுரி மாவட்டத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. வரும் ஏப்ரல் 23, 2026 அன்று வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

