Type Here to Get Search Results !

தருமபுரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் ₹5.58 லட்சம் பணம் பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர்.


தருமபுரி – ஏப்ரல் 02:


தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்–2026 முன்னிட்டு, 02.04.2026 மாலை 6.00 மணி முதல் 03.04.2026 மாலை 6.00 மணி வரை தருமபுரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் மொத்தம் ₹5,58,000 பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


அதன்படி,

  • பாலக்கோடு (57) தொகுதியில் ₹1,90,000
  • பாப்பிரெட்டிப்பட்டி (60) தொகுதியில் ₹3,68,000

பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


மற்ற தொகுதிகளான பென்னாகரம் (58), தருமபுரி (59), ஹரூர் (61) ஆகிய இடங்களில் எந்தவொரு பணமோ அல்லது பொருட்களோ பறிமுதல் செய்யப்படவில்லை.


மேலும், மதுபானம், போதைப்பொருட்கள், மதிப்புள்ள உலோகங்கள் மற்றும் இலவசப் பொருட்கள் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை என்றும், இந்த காலப்பகுதியில் எந்த FIR-மும் பதிவு செய்யப்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தேர்தல் ஒழுங்குமுறை விதிகளை கடைப்பிடிக்க மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் சோதனைகளை தீவிரப்படுத்தி வருகிறது.

© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies