Type Here to Get Search Results !

“தேர்தல் மாரத்தான் 2026”; 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி தருமபுரியில் மாபெரும் விழிப்புணர்வு ஓட்டம் நடைபெற்றது.


தருமபுரி – ஏப்ரல் 08:


தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்–2026 முன்னிட்டு, 100 சதவீத வாக்குப்பதிவை உறுதிசெய்யும் நோக்கில் தருமபுரி மாவட்ட விளையாட்டரங்கத்தில் “தேர்தல் மாரத்தான் 2026” என்ற பெயரில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக மாரத்தான் ஓட்டப் போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் 08.04.2026 அன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.


இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, வரும் ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெற உள்ள தேர்தலில் தவறாமல் வாக்களிப்போம், “என் வாக்கு விற்பனைக்கல்ல” என்ற விழிப்புணர்வை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த மாரத்தான் போட்டியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர்.


ஆண்களுக்கான போட்டி மாவட்ட விளையாட்டரங்கத்தில் தொடங்கி 4 ரோடு – பாரதிபுரம் வரை சென்று மீண்டும் விளையாட்டரங்கத்தை அடைந்தது. பெண்களுக்கான போட்டி 4 ரோடு – அரசு மருத்துவமனை வரை சென்று திரும்பி வந்தது. போட்டியில் வெற்றி பெற்ற வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு பரிசுக்கோப்பைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். மேலும், போட்டியில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளி ஒருவருக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.


இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரூபன் சங்கர் ராஜ், மகளிர் திட்ட அலுவலர் சு. சுந்தர்ராஜன், தேர்தல் நடத்தும் அலுவலர் இரா. காயத்ரி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வெ. லோகநாதன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் எஸ். சிவரஞ்சன், வட்டாட்சியர் ஜெ. சுகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies