தருமபுரி, ஏப்ரல். 06:
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்–2026 முன்னிட்டு, தருமபுரி மாவட்டத்தில் பறக்கும் படை (FST) மற்றும் நிலையான கண்காணிப்பு குழு (SST) அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 05.04.2026 மாலை 6.00 மணி முதல் 06.04.2026 மாலை 6.00 மணி வரை மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில், மொத்தம் ரூ.3,87,850 மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி:
- பென்னாகரம் தொகுதியில் ரூ.3,00,000 பறிமுதல் செய்யப்பட்டது.
- பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் ரூ.87,850 பறிமுதல் செய்யப்பட்டது.
- பாலக்கோடு தொகுதியில் 48 கேப்கள் (caps) கைப்பற்றப்பட்டன.
மொத்தமாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மற்ற தொகுதிகளில் (தருமபுரி, அரூர்) பறிமுதல் எதுவும் பதிவாகவில்லை.
தேர்தல் விதிமுறைகள் மீறப்படாமல் இருக்க மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

