Type Here to Get Search Results !

பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் மரகதம் வெற்றிவேல் வேட்புமனு தாக்கல் செய்தார்.


பாப்பிரெட்டிப்பட்டி – ஏப்ரல் 06:


தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்–2026 முன்னிட்டு, பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் மரகதம் வெற்றிவேல் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கல் நிகழ்வில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி, அதிமுகவின் எஸ்.ஆர். வெற்றிவேல், பாமக மற்றும் பாஜக கட்சியின் பிரமுகர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர். மேலும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர்.


பின்னர், தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மரகதம் வெற்றிவேல் தனது வேட்புமனுவை அதிகாரப்பூர்வமாக சமர்ப்பித்தார்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies