Type Here to Get Search Results !

தருமபுரியில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி: திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு என அறிவிப்பு.


தருமபுரி – ஏப்ரல் 03:


தருமபுரி மாவட்ட இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு கூட்டம் நல்லம்பள்ளி வட்டம் இலளிகம் தியாகி ஆர். பச்சாகவுண்டர் நினைவு படிப்பகத்தில் நடைபெற்றது. மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் எல்.சி. கிருஷ்ணன் தலைமையில் கூட்டம் நடந்தது.


இந்த கூட்டத்தில் கட்சியின் மாநிலத் தலைவர் ப.கி. பட்டாபிராமன் கலந்து கொண்டு, வரவிருக்கும் 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு வழங்கப்படும் என அறிவித்தார். மேலும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களின் வெற்றிக்காக இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி முழுமையாக பாடுபடும் என தெரிவித்தார்.


மாவட்ட செயலாளர் ஜெ. பிரதாபன் பேசுகையில், தருமபுரி மாவட்டத்தில் திமுக கூட்டணிக்கட்சிகளின் வேட்பாளர்களுக்கு தீவிர பிரசாரம் மேற்கொள்ளப்படும் என கூறினார்.

அதன்படி,

  • தருமபுரி தொகுதியில் தேமுதிக வேட்பாளர் டாக்டர் இளங்கோவன் (முரசு சின்னம்)
  • பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் திமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் பி. பழனியப்பன்
  • பாலக்கோடு தொகுதியில் திமுக வேட்பாளர் டாக்டர் டி.என்.வி. செந்தில்குமார்
  • அரூர் (தனி) தொகுதியில் திமுக வேட்பாளர் அ. சண்முகம்
  • பென்னாகரம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் தமிழ்குமரன் (கை சின்னம்)

இவர்களுக்கு ஆதரவாக வாக்கு கேட்டு பிரசாரம் செய்யப்படும் என தெரிவித்தார்.


இந்த கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர் ஜி. மாதையன், மாவட்ட பொருளாளர் ஈ. அலமேலு, நிர்வாகக்குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies