Type Here to Get Search Results !

அரூர், பாப்பிரெட்டிப்பட்டியில் அன்புமணி ராமதாஸ் தீவிர பிரச்சாரம்; நீர்திட்டங்கள் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்தார்.




பாப்பிரெட்டிப்பட்டி, ஏப்ரல். 15:


தருமபுரி மாவட்டம் அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிகளில் தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் சம்பத்குமார் மற்றும் மரகதம் வெற்றி வேல் ஆகியோருக்கு ஆதரவாக இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்து அவர் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

பிரச்சாரத்தின் போது பேசிய அன்புமணி ராமதாஸ், “ஒகேனக்கல்லில் இருந்து கடலில் வீணாக கலக்கும் உபரி நீரை மீன் மோட்டார் மூலம் ஏரிகள் மற்றும் குளங்களில் சேமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். மேலும், தென்பெண்ணை ஆற்றின் ஈச்சம்பாடியில் தடுப்பணை அமைத்து, மின்மோட்டார்களின் மூலம் நீரை சேமிக்கும் திட்டமும் செயல்படுத்தப்படும் என தெரிவித்தார். தருமபுரி – மொரப்பூர் ரயில்வே திட்டத்தை விரைந்து முடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.


இந்த பிரச்சாரத்தில் அதிமுக, பாமக மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies