Type Here to Get Search Results !

அ.தி.மு.க விலிருந்து விலகி திமுகவில் இணைந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்.


பாலக்கோடு, ஏப்ரல். 22:


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பி.செட்டிஅள்ளியை சேர்ந்த முன்னாள் அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் கணபதி, தனது ஆதரவாளர்கள் 20-க்கும் மேற்பட்டோருடன் அ.தி.மு.க. விலிருந்து விலகி திமுகவில் இணைந்தார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், பாலக்கோடு சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளருமான டாக்டர் டி.என்.வி. செந்தில்குமார் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்வில் அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தனர்.



இந்த இணைப்பு நிகழ்ச்சியில் பாலக்கோடு தெற்கு மற்றும் மத்திய ஒன்றிய செயலாளர்கள் முனியப்பன், ஆனந்தன், மாவட்ட பொருளாளர் முருகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மகேஷ்குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் ராஜகோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


மேலும், முன்னாள் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் குமார், ஒன்றிய குழு உறுப்பினர் அழகுசிங்கம், நிர்வாகிகள் செந்தில், அற்புதம் செந்தில், அமீர்கான், டாக்டர் கார்த்திகேயன், கிளை செயலாளர்கள் முருகன், தங்கவேல் உள்ளிட்ட பலரும் நிகழ்வில் உடனிருந்தனர். இந்த இணைப்பு நிகழ்வு பாலக்கோடு பகுதியில் அரசியல் வட்டாரத்தில் கவனம் ஈர்த்துள்ளது.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies