Type Here to Get Search Results !

அரூரில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் முப்பெரும் விழா – பணிநிறைவு ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.


அரூர் – மார்ச் 26:


தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பில் அரூரில் உள்ள தனியார் மண்டபத்தில் முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது. பணிநிறைவு பாராட்டு விழா, பணிமாறுதல் பெற்றவர்களுக்கு வாழ்த்து மற்றும் புதிய உறுப்பினர்களை வரவேற்பு, புதிய கிளைகள் தொடக்கம் ஆகிய நிகழ்வுகள் ஒருங்கிணைந்த வடிவில் நடைபெற்றன.


இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட அமைப்பாளர் ஆ. திருநாவுக்கரசு தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் கவியரசன் வரவேற்புரை வழங்கினார். ஒன்றிய தலைவரும் மாநில விதிமுறை குழு உறுப்பினருமான அ. ஜெயப்பிரகாஷ் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.


மாநில பொதுச் செயலாளர் நா. சண்முகநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பணிநிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கி வாழ்த்துரை வழங்கினார். மாநில தலைவர் இரா. ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


இந்த விழாவில் நிர்வாகிகள் தீர்த்தகிரி, தெ. மோகன், பா. மணிவண்ணன், வை. மயிலாப்பு, சாமிநாதன், கே.சி. சிவராசு, கோ. தமிழ்மணி, மு. சிவகுமார், அண்ணாதுரை, க. திருமால், கோ. அமராவதி, பெ. அழகியம்மாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் முன்னாள் மாவட்ட நிர்வாகிகள் தீ. சிவப்பிரகாசம், கோ. சர்வரட்சகன், பெ. சந்திரசேகர் மற்றும் மாநில பொறுப்பாளர்கள் வேலுமணி, ஆரோக்கியராசு, ந. ரவிச்சந்திரன், மோகன், எஸ். செந்தில்குமார் ஆகியோரும் பங்கேற்றனர். இறுதியாக, பழனியம்மாள் நன்றி தெரிவித்தார்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies