Type Here to Get Search Results !

தருமபுரியில் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் மார்ச் 29ல் நடைபெறவுள்ளது.



தருமபுரி – மார்ச் 26:


தருமபுரியில் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் வரும் மார்ச் 29 (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது என தமிழ்நாடு தனியார் ஆசிரியர் மன்றம் அறிவித்துள்ளது. இந்த முகாம் தருமபுரியில் உள்ள KAMALAM INTERNATIONAL SCHOOL வளாகத்தில் காலை 9.00 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடைபெற உள்ளது.

ஆசிரியர்களுக்கென சிறப்பு வகையில் நடத்தப்படும் இந்த முகாமில், ஆசிரியர் பயிற்சி பெற்ற பட்டதாரிகள், முதுநிலை பட்டதாரிகள், உடற்கல்வி ஆசிரியர்கள் உள்ளிட்ட ஆண், பெண் இருபாலரும் தங்களது கல்விச்சான்றுகளுடன் கலந்து கொள்ளலாம். இந்த முகாமில் பங்கேற்க வயது வரம்பு எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த வேலைவாய்ப்பு முகாமில் 15-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் நேரடியாக பங்கேற்று தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


எனவே, தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் அதிகளவில் கலந்து கொண்டு இவ்வாய்ப்பை பயன்படுத்தி வேலைவாய்ப்பு பெறுமாறு தமிழ்நாடு தனியார் ஆசிரியர் மன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies