தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பறக்கும் படையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் மொத்தம் ரூ.5,26,500 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
ஆரதஅள்ளி பிரிவு சாலை மற்றும் எர்ரணஅள்ளி மேம்பாலம் பகுதிகளில் நடைபெற்ற சோதனையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் அம்மன்கொல்லைமேடு கிராமத்தைச் சேர்ந்த சரண்குமார் (23) என்பவரிடமிருந்து உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.80,000 பறிமுதல் செய்யப்பட்டது.
அதேபோல், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த கோழி வியாபாரி கமலஹாசன் (45) என்பவரிடமிருந்து ரூ.4,46,500 பறிமுதல் செய்யப்பட்டது.
இரண்டு இடங்களில் பறிமுதல் செய்யப்பட்ட மொத்தம் ரூ.5,26,500 ரொக்கம், உரிய ஆவணங்கள் இல்லாததால் தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அசோக்குமாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், மாவட்டம் முழுவதும் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

