பாலக்கோடு - மார்ச். 21:
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பறக்கும் படையினர் நடத்திய தீவிர வாகன சோதனையில் மொத்தம் ரூ.4,49,320 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
கும்பாரஅள்ளி சோதனைச் சாவடியில் காவலர் பெருமாள் தலைமையில் நடைபெற்ற சோதனையில்,
- கிருஷ்ணகிரி மாவட்டம் கிட்டம்பட்டி அம்மன் நகரைச் சேர்ந்த பரணி (31) என்பவரிடமிருந்து ரூ.1 லட்சம்,
- கர்நாடக மாநிலம் ஒனகனஅட்டி கிராமத்தைச் சேர்ந்த பிரபாகர் (41) என்பவரிடமிருந்து ரூ.1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
- எர்ரனஅள்ளி பிரிவு சாலையில் காரிமங்கலம் நடுக்கொள்ளுப்பட்டியைச் சேர்ந்த கோவிந்தராஜ் (46) என்பவரிடமிருந்து ரூ.53,000 பறிமுதல் செய்யப்பட்டது.
- சாமனூர் பிரிவு சாலையில் காவேரிப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த மாதேஸ்வரன் (62) என்பவரிடமிருந்து ரூ.60,700 பறிமுதல் செய்யப்பட்டது.
- மேலும், கல்கூடஅள்ளி முனியப்பன் கோயில் அருகே நடத்தப்பட்ட சோதனையில் பி.கொல்லஅள்ளியைச் சேர்ந்த சக்தி (40) என்பவரிடமிருந்து ரூ.85,000,
- காவேரிப்பட்டினத்தைச் சேர்ந்த பவுன்ராஜ் (43) என்பவரிடமிருந்து ரூ.50,620 பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த ஆறு இடங்களில் பறிமுதல் செய்யப்பட்ட மொத்தம் ரூ.4,49,320 ரொக்கம், உரிய ஆவணங்கள் இல்லாததால் தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அசோக்குமாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், மாவட்டம் முழுவதும் பறக்கும் படையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

