தருமபுரி - மார்ச். 13:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு–11 (Group–II மற்றும் Group–II A Services) பதவிகளுக்கான முதன்மை எழுத்துத் தேர்வு வரும் 15.03.2026 அன்று முற்பகல் மற்றும் பிற்பகல் நடைபெற உள்ளது. தருமபுரி மாவட்டத்தில் இந்த தேர்வு அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் நடைபெற உள்ளது. இதில் முற்பகலில் 325 தேர்வர்களும், பிற்பகலில் 344 தேர்வர்களும் தேர்வு எழுத உள்ளனர்.
தேர்வு மையத்தில் தேர்வர்கள் வசதிக்காக குடிநீர், மின்வசதி மற்றும் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் தேர்வு மையத்தில் பேருந்துகள் நின்று செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், தேவையான சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. தேர்வர்களின் அனுமதிச் சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு, காலை 08.30 மணி முதல் 08.59 மணி வரை மற்றும் பிற்பகல் 01.30 மணி முதல் 01.59 மணி வரை மட்டுமே தேர்வு மையத்திற்குள் அனுமதி வழங்கப்படும்.
மேலும், தேர்வாணையத்தால் தடை செய்யப்பட்ட எலக்ட்ரானிக் சாதனங்கள் தேர்வு கூடங்களுக்கு கொண்டு செல்ல அனுமதி இல்லை. தேர்வர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் தேர்வு மையத்திற்கு சென்று, கடைசி நேர அவசரத்தை தவிர்த்து, தேர்வாணைய விதிமுறைகளை முழுமையாக படித்து கடைபிடிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஸ், இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)