தருமபுரி - மார்ச். 13:
தருமபுரி மாவட்ட வருவாய் அலகில் மாவட்ட ஆட்சியரின் கட்டுப்பாட்டில் இருந்து வந்த வருவாய்த் துறைக்கு சேர்ந்த 3 அரசு வாகனங்கள் கழிவு செய்யப்பட்டு ஏலத்திற்கு விடப்படுகின்றன என மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஸ், இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.
அதன்படி,
-
தனிவட்டாட்சியர் (ச.பா.தி), பென்னாகரம் பயன்பாட்டில் இருந்த வாகனம் – ஆரம்ப ஏலத் தொகை ₹4,80,000
-
தனிவட்டாட்சியர் (ச.பா.தி), பாப்பிரெட்டிப்பட்டி பயன்பாட்டில் இருந்த வாகனம் – ஆரம்ப ஏலத் தொகை ₹70,000
-
தனிவட்டாட்சியர் (Fund), பாலக்கோடு பயன்பாட்டில் இருந்த வாகனம் – ஆரம்ப ஏலத் தொகை ₹45,000
என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கழிவு செய்யப்பட்ட வாகனங்கள் 17.03.2026 அன்று பிற்பகல் 4.00 மணிக்கு புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம், முல்லை கூட்டரங்கம் (அறை எண் 208) இல் நடைபெறும் ஏலத்தில் விற்பனை செய்யப்பட உள்ளன. இந்த ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் நேரில் கலந்து கொண்டு விலைப்புள்ளி அளிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)