தருமபுரி - மார்ச் 12:
தருமபுரியில் செயல்பட்டு வரும் பெரியார் பல்கலைக்கழக முதுகலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளுக்கான மையத்தின் மகளிர் அதிகாரமளிப்பு பிரிவு சார்பில் சர்வதேச மகளிர் தினம் – 2026 விழா மார்ச் 12ஆம் தேதி வளாகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சி கணிதத் துறை உதவிப் பேராசிரியரும், மகளிர் அதிகாரமளிப்பு பிரிவின் ஒருங்கிணைப்பாளருமான டாக்டர் என். அனிதா அவர்களின் வரவேற்பு உரையுடன் தொடங்கியது. நிகழ்ச்சியில் மையத்தின் தலைமை இயக்குநர் டாக்டர் எம். செல்வபாண்டியன் தலைமையுரை நிகழ்த்தினார். மேலும் சேலம் பெரியார் பல்கலைக்கழக தமிழ்த் துறை பேராசிரியர் டாக்டர் ஆர். வசந்தமலை தலைமை விருந்தினராக கலந்து கொண்டு “பெண் எனும் பேரொளி” என்ற தலைப்பில் உற்சாகமான உரையை நிகழ்த்தினார்.
நிகழ்ச்சியின் இறுதியில் கணினி அறிவியல் உதவிப் பேராசிரியரும், மகளிர் அதிகாரமளிப்பு பிரிவின் உறுப்பினருமான டாக்டர் கே. பிரபா நன்றியுரை வழங்கியதுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)