Type Here to Get Search Results !

Group–II, II-A முதன்மை தேர்வு மையத்தை பார்வையிட்ட தருமபுரி மாவட்ட ஆட்சியர்.


தருமபுரி - மார்ச் 15:


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தொகுதி II மற்றும் II-A பதவிகளுக்கான முதன்மை எழுத்துத் தேர்வு தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்றது. இந்த தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டார். இந்த தேர்வு அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் இன்று (15.03.2026) முற்பகல் மற்றும் பிற்பகல் இரண்டு அமர்வுகளில் நடைபெற்றது.


முற்பகல் நடைபெற்ற தேர்வில் 325 தேர்வர்களில் 307 தேர்வர்கள் தேர்வு எழுதினர். 18 தேர்வர்கள் தேர்வில் பங்கேற்கவில்லை. அதேபோல் பிற்பகல் நடைபெற்ற தேர்வில் 344 தேர்வர்களில் 312 தேர்வர்கள் தேர்வில் கலந்து கொண்டு எழுதினர். 32 தேர்வர்கள் தேர்வில் பங்கேற்கவில்லை. தேர்வு நடைபெறும் மையத்தை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு, தேர்வு பணிகள் சிறப்பாக நடைபெறுகிறதா என்பதை ஆய்வு செய்தார்.


இந்நிகழ்வில் தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் இரா. காயத்ரி மற்றும் வட்டாட்சியர் சுகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies