Type Here to Get Search Results !

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்: தருமபுரியில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஒத்திவைப்பு. – மாவட்ட ஆட்சியர் தகவல்.


தருமபுரி - மார்ச் 15:


இந்திய தேர்தல் ஆணையம் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் – 2026 தொடர்பான அறிவிப்பை வெளியிட்டதைத் தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன. இதன் காரணமாக தருமபுரி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது என மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ரெ. சதீஸ், இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.


தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் இருக்கும் காலப்பகுதியில் இந்த கூட்டம் நடத்தப்படாது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் திரும்ப பெறப்பட்ட பின்னர் மீண்டும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் என்றும், அதற்கான இறுதி அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.


இதற்கிடையில் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் மற்றும் குறைகளை மனுவாக அளிக்க விரும்பினால், தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்டத்தின் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் வைக்கப்பட்டுள்ள மனு பெட்டிகளில் மனுக்களை அளிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies