Type Here to Get Search Results !

இரண்டு நாட்களுக்கு சேவைகள் இல்லை. - தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் அறிவிப்பு.


தருமபுரி – மார்ச் 12:


தருமபுரி மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கணினி (Server) மேம்பாட்டு பணிகள் நடைபெறுவதால், 14.03.2026 மற்றும் 15.03.2026 ஆகிய இரண்டு நாட்களில் சில சேவைகள் தற்காலிகமாக பாதிக்கப்பட உள்ளன. இந்த நாட்களில் பணிகள் நடைபெறுவதால் கணினி வழியாக (Online) மின் கட்டணம் செலுத்துதல், புதிய விண்ணப்ப பதிவு உள்ளிட்ட சேவைகள் தற்காலிகமாக செய்ய இயலாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


எனவே பொதுமக்கள் இந்த இரண்டு நாட்களிலும் மேற்கண்ட சேவைகள் கிடைக்காது என்பதை கவனத்தில் கொண்டு தேவையான ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies