தருமபுரி - மார்ச் 12:
தருமபுரி நகரில் உள்ள BSNL அலுவலகம் அருகே தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சித் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டம் மாவட்டச் செயலாளர் சிவன் தலைமையில் நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் சாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வுக்கான அரசாணையை உடனடியாக வெளியிட வேண்டும் என்றும், தமிழகத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். மேலும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு அதிகரித்துள்ளதையும், மாநிலம் முழுவதும் பரவி வரும் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு தவறியுள்ளதாகவும் கண்டனம் தெரிவித்தனர்.
அதேபோல் அரசியல் கட்சிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் என்ற பெயரில் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடத்தும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை தடுக்கவும், அவற்றை நீர்த்துப் போகச் செய்யவும் ஜனநாயக விரோதமான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினர். எனவே இத்தகைய ஜனநாயக விரோத வழிகாட்டு நெறிமுறைகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தினர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)