Type Here to Get Search Results !

TANFINET - மாவட்ட அளவிலான தொழில் பங்கீட்டாளர் தேர்வு: நிதி தகுதி தளர்வு, போர்டல் மீண்டும் திறப்பு.


தருமபுரி - மார்ச். 18:

 

தமிழ்நாடு அரசின் நிறுவனம் தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் (TANFINET), பாரத்நெட் திட்டம் மூலம் கிராமப்புறங்களுக்கு உயர்தர இணைய சேவைகளை வழங்கும் நோக்கில், மாவட்ட அளவிலான தொழில் பங்கீட்டாளர்கள் (DLFP) தேர்வு செய்யும் பணிகளை முன்னெடுத்து வருகிறது.


01.01.2026 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பைத் தொடர்ந்து, பல்வேறு தரப்பிலிருந்து வந்த கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, அதிகமான விண்ணப்பதாரர்கள் பங்கேற்கும் வகையில் நிதி தகுதி விதிமுறையில் தளர்வு வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக, கடந்த மூன்று நிதியாண்டுகளின் சராசரி ஆண்டு வருவாய் ₹50 இலட்சம் மற்றும் அதற்கு மேல் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை இருந்த நிலையில், தற்போது அது ₹20 இலட்சம் மற்றும் அதற்கு மேல் என மாற்றப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பாரத்நெட் திட்டப் பணிகள் சுமார் 96% நிறைவடைந்துள்ளன. மாநிலத்தின் 37 மாவட்டங்களிலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது 2 தொழில் பங்கீட்டாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்காக மாவட்டங்கள், வருவாய் உட்கோட்ட அடிப்படையில் 2 முதல் 6 துணைப் பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, அந்த அடிப்படையில் தேர்வு நடைபெறும்.


முக்கிய அம்சங்கள்:

  • ஒரு விண்ணப்பதாரர் அதிகபட்சம் 2 மாவட்டங்களுக்கு மட்டுமே விண்ணப்பிக்கலாம்

  • விண்ணப்பிக்கும் மாவட்டம், விண்ணப்பதாரரின் முகவரி அல்லது நிறுவனத்தின் செயல்பாட்டு பகுதி அமைந்திருக்க வேண்டும்

  • தேர்வு செய்யப்பட்டவர்களின் பொறுப்புகள்:

    • OFC & ONT பராமரிப்பு

    • தடையில்லா இணைய சேவை வழங்கல்

    • சேவை குறைகளை உடனடி சரிசெய்தல்

    • SLA விதிமுறைகளை பின்பற்றுதல்


விண்ணப்ப நடைமுறை:

  • விண்ணப்பங்கள் TANFINET இணையதள போர்டல் மூலம் மட்டுமே ஏற்கப்படும்

  • தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்து, செயல்பட விரும்பும் துணைப் பிரிவை தேர்வு செய்ய வேண்டும்

  • ஒவ்வொரு துணைப் பிரிவிற்கும் ₹25,000 (திரும்பப்பெறக்கூடிய வைப்பு தொகை) செலுத்த வேண்டும்


தேர்வு செய்யப்பட்ட பங்கீட்டாளர்களுக்கு:

  • ஒவ்வொரு வட்டாரத்திற்கும் ₹2,00,000 பாதுகாப்பு வைப்பு

  • பின்னர் சென்னை TANFINET தலைமையகத்தால் Work Order வழங்கப்படும்


ஏற்கனவே விண்ணப்பித்து கட்டணம் செலுத்தியவர்கள், அதே வருவாய் உட்கோட்டத்திற்கு மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை. ஆனால், அதே மாவட்டத்தின் பிற துணைப் பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.


முக்கிய தேதிகள்:

  • போர்டல் திறப்பு: 10.03.2026

  • கடைசி தேதி: 10.04.2026

மேலும் விவரங்களுக்கு: 044-24965595

இந்த தகவலை மாவட்ட ஆட்சியர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies