Type Here to Get Search Results !

2026 - 2027 சிறப்பு விளையாட்டு விடுதி மாணவர் சேர்க்கை தொடக்கம்; விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.


தருமபுரி - மார்ச். 18:


தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) கீழ் செயல்படும் சிறப்பு விளையாட்டு விடுதிகளில், கல்லூரி மாணவர்கள் மற்றும் மாணவியர்களுக்கு அறிவியல் சார்ந்த பயிற்சி, தங்குமிடம் மற்றும் சத்தான உணவு வசதியுடன் விளையாட்டு பயிற்சி வழங்கப்படுகிறது.


2026–2027 ஆண்டிற்கான சேர்க்கை அறிவிப்பு வெளியாகியுள்ளது.


📌 தகுதி விவரங்கள்:

  • வயது: 17 முதல் 25 வயது

  • பிறந்த தேதி:

    • 01.07.2001 அல்லது அதற்கு பின்னர்

    • 01.07.2009 அல்லது அதற்கு முன்னர்

  • கல்வி:

    • 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று கல்லூரியில் சேரும் மாணவர்கள்

    • முதுநிலை படிப்பிற்கு விண்ணப்பிக்க இளநிலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்



🏅 விளையாட்டு தகுதி:

  • தேசிய / மாநில அளவிலான போட்டிகளில் பதக்கம் வென்றவர்களுக்கு முன்னுரிமை

  • இளநிலை படிப்பின் போது சர்வதேச / தேசிய அளவிலான சாதனைகள் இருந்தால் கூடுதல் முன்னுரிமை



🖥️ விண்ணப்பிக்கும் முறை:

  • ஆன்லைன் மூலம் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்

  • இணையதளம்: www.sdat.tn.gov.in

  • விண்ணப்ப தொடக்கம்: 13.03.2026

  • கடைசி தேதி: 26.03.2026 மாலை 5.00 மணி

📞 உதவி எண்: 9514000777



🏟️ மாநில அளவிலான தேர்வுப் போட்டிகள் – 30.03.2026

📍 ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம், சென்னை

  • தடகளம் (ஆண் & பெண்)

  • பளுதூக்குதல் (ஆண் & பெண்)

  • ஜுடோ (ஆண் & பெண்)

  • வாள் விளையாட்டு (ஆண் & பெண்)

  • கால்பந்து (ஆண்)

  • கையுந்துபந்து (ஆண் & பெண்)


📍 ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கம், சென்னை

  • கூடைப்பந்து (ஆண் & பெண்)

  • குத்துச்சண்டை (ஆண் & பெண்)

  • கால்பந்து (பெண்)

  • கைப்பந்து (ஆண் & பெண்)


📍 மேயர் இராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டரங்கம், சென்னை

  • ஹாக்கி (ஆண் & பெண்)

  • கபாடி (ஆண் & பெண்)


தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியான விளையாட்டு வீரர், வீராங்கனைகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.



© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies