Type Here to Get Search Results !

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026: இன்று முதல் தருமபுரி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமல் – தருமபுரி ஆட்சியர் தகவல்.


தருமபுரி - மார்ச் 15:


தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் – 2026 தொடர்பான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டதைத் தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ரெ. சதீஸ், இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.


இதன் படி, தருமபுரி மாவட்டத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளான 15.03.2026 மாலை முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. அரசியல் கட்சிகளும் பொதுமக்களும் தேர்தல் விதிமுறைகளை கடைப்பிடித்து தேர்தலை அமைதியாக நடத்த ஒத்துழைக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.


தேர்தல் கால அட்டவணை

  • வேட்பு மனு தாக்கல் தொடக்கம் – 30.03.2026

  • வேட்பு மனு தாக்கல் கடைசி நாள் – 06.04.2026

  • வேட்பு மனுக்கள் பரிசீலனை – 07.04.2026

  • மனு திரும்ப பெற கடைசி நாள் – 09.04.2026

  • வாக்குப்பதிவு நாள் – 23.04.2026

  • வாக்கு எண்ணிக்கை – 04.05.2026

  • தேர்தல் நடைமுறைகள் முடிவு – 06.05.2026


தருமபுரி மாவட்ட தேர்தல் ஏற்பாடுகள்

தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 1,596 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் மொத்தம் 12,40,108 வாக்காளர்கள் உள்ளனர்.


வாக்காளர்களில்

  • ஆண் – 6,24,647

  • பெண் – 6,15,311

  • மூன்றாம் பாலினம் – 150
    என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு

தேர்தல் விதிமுறைகளை கண்காணிக்க ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் 3 பறக்கும் படை குழுக்கள் மற்றும் 3 நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் செயல்படும்.


தேர்தல் தொடர்பான புகார்கள்

பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை

  • C-Vigil செயலி,

  • கட்டணமில்லா எண் 1800 425 7017,

  • வாட்சப் எண் 94439 47017,

  • மின்னஞ்சல் controlroomdpi@gmail.com
    மூலம் தெரிவிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


மேலும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால், உரிமம் பெற்ற துப்பாக்கி வைத்திருப்பவர்கள் தங்களது ஆயுதங்களை உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies