தருமபுரி - மார்ச் 15:
தருமபுரி நகர ஒன்றிய திமுக மற்றும் மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் மத்திய பாஜக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தருமபுரி நகரம் பாரதிபுரத்தில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் மாவட்ட செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தடங்கம் சுப்ரமணி தலைமையேற்றார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு தமிழ்நாட்டை வஞ்சித்து வருவதாகவும், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்தும், தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய கல்வி நிதி மற்றும் மெட்ரோ ரயில் திட்டம் போன்ற வளர்ச்சி திட்டங்களை வழங்காத ஒன்றிய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுகவின் மாவட்ட பொருளாளர் தங்கமணி, தருமபுரி நகர செயலாளர்கள் நாட்டான் மாது, கௌதம், ஒன்றிய செயலாளர் காவேரி, நகர துணை செயலாளர் முல்லைவேந்தன், திமுக பேச்சாளர் ரவி, மாவட்ட இலக்கிய அணி டி.ஏ. குமார், மாதேஸ்வரன், வெல்டிங் ராஜா, மே. அன்பழகன், தகவல் தொழில்நுட்ப அணி உதயசூரியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் தேமுதிக மாநில அவைத்தலைவர் இளங்கோவன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் பாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, மக்கள் நீதி மையம் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)