கல்லூரியின் உடற்கல்வி இயக்குநர் முனைவர் கு. பாலமுருகன் வரவேற்புரை நிகழ்த்தினார். கல்லூரி முதல்வர் முனைவர் கோ. கண்ணன் தலைமை தாங்கினார். தென்னக ரயில்வே சேலம் மண்டலத்தைச் சேர்ந்த சிறப்பு விருந்தினர் விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்தார். வாலிபால், ஏறிப்பந்து, கால்பந்து, இறகுப்பந்து, பழைய பந்து, கேரம், சதுரங்கம் மற்றும் தடகளப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு தகுதிச் சான்றிதழ்கள், பதக்கங்கள், பரிசுப் பொருட்கள் மற்றும் வெற்றிக் கோப்பைகள் வழங்கப்பட்டன.
ஒட்டு மொத்த சாம்பியன் கோப்பையை கணிதத் துறை பெற்றது. இரண்டாம் இடத்தை பி.காம் (சி.ஏ) துறையும், மூன்றாம் இடத்தை அரசியல் அறிவியல் துறையும் பெற்றன. விழாவில் என்சிசி மாணவர்களின் பிரமிடு நிகழ்ச்சியும், விளையாட்டு மாணவர்களின் சிலம்பம் நிகழ்ச்சியும் நடைபெற்றது. பெண்கள் விளையாட்டு செயலாளர் ஜீவிதா ஒலிம்பிக் உறுதிமொழியை வாசித்தார். வேதியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவரும் விளையாட்டு செயலருமான ரவிசங்கர் நன்றி கூறினார்.
விளையாட்டு விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கல்லூரி உடற்கல்வித் துறை இயக்குநர் முனைவர் கு. பாலமுருகன் மற்றும் விளையாட்டு தன்னார்வ மாணவர்கள் மேற்கொண்டிருந்தனர்.
#தகடூர்குரல் #ThagadurKural #தருமபுரி #Dharmapuri #CollegeSportsDay #SportsNews #GovernmentArtsCollege #StudentEvents #TamilNews #LocalNews
.gif)

.jpg)