இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள தகவலில் கூறியதாவது:
2021–2022 ஆம் ஆண்டில் ரூ.10.5 இலட்சம் மதிப்பீட்டில் உலர் களம் அமைக்கப்பட்டு 1,290 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.
2022–2023 ஆம் ஆண்டில் ரூ.42 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட உலர் களங்கள் மூலம் 932 விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர்.
2023–2024 ஆம் ஆண்டில் ரூ.34 இலட்சம் மதிப்பீட்டில் உலர் களங்களுடன் கூடிய சிப்பம் கட்டும் கூடம் அமைக்கப்பட்டு 520 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.
2024–2025 ஆம் ஆண்டில் ரூ.1.40 இலட்சம் மதிப்பீட்டில் உலர் களங்களுடன் கூடிய சிப்பம் கட்டும் கூடம் அமைக்கப்பட்டு 365 நபர்கள் பயன்பெற்றுள்ளனர்.
மேலும் 2025–2026 ஆம் ஆண்டில் முதலமைச்சரின் உழவர் நல சேவை மைய திட்டத்தின் கீழ் ரூ.12 இலட்சம் மதிப்பீட்டில் 2 உழவர் நல சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதே ஆண்டில் ரூ.7.60 இலட்சம் மதிப்பீட்டில் உலர் களங்களுடன் கூடிய சிப்பம் கட்டும் கூடமும் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இந்த வசதிகள் மூலம் விவசாயிகள் தங்களது விளைபொருட்களை உலர்த்தி பாதுகாப்பாக சேமித்து விற்பனை செய்யும் வசதி கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
#தகடூர்குரல் #ThagadurKural #தருமபுரி #Dharmapuri #AgricultureNews #Farmers #Uzhavar #TamilNaduAgriculture #DistrictNews #TamilNews
.gif)

.jpg)