தருமபுரி - மார்ச். 13:
தருமபுரி மாவட்டத்தில் அடையாளம் தெரியாத மற்றும் சாலை விபத்தில் உயிரிழந்த இரண்டு நபர்களின் புனித உடல்களை மை தருமபுரி அமைப்பினர் நல்லடக்கம் செய்தனர். அதியமான்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார். அவரின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டபோதும், அவரைப் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை.
அதேபோல் ஓசூர் போக்குவரத்து புலனாய்வு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சாலை விபத்தில் உயிரிழந்த ஒருவரின் புனித உடலும் உறவினர்கள் யாரும் வராத நிலையில் இருந்தது. இதையடுத்து, காவல்துறையினரின் அனுமதியுடன் அந்த இரண்டு பேரின் உடல்களுக்கும் மை தருமபுரி அமைப்பினர் இறுதி அஞ்சலி செலுத்தி நல்லடக்கம் செய்தனர்.
இந்த நிகழ்வில் ஓசூர் போக்குவரத்து புலனாய்வு காவல் ஆய்வாளர் சிவகுமார், அதியமான்கோட்டை காவல் நிலைய காவல் ஆய்வாளர் ராமர் முன்னிலையில் மை தருமபுரி அமைப்பின் நிறுவனத் தலைவர் சதீஸ் குமார் ராஜா, அமைப்பாளர் சையத் ஜாபர், தன்னார்வலர் கணேஷ் ஆகியோர் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
மை தருமபுரி அமரர் சேவை அமைப்பின் மூலம் இதுவரை மொத்தம் 196 ஆதரவற்றோரின் புனித உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)