Type Here to Get Search Results !

ஏழ்மையில் உயிரிழந்த முதியவரின் உடலை நல்லடக்கம் செய்த மை தருமபுரி அமைப்பினர்.


தருமபுரி - மார்ச் 12:


தருமபுரி நகரம் செல்வகவுண்டர் தெரு பகுதியைச் சேர்ந்த முருகேசன் (60) என்ற முதியவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், அவரது உடலை மை தருமபுரி அமைப்பினர் இறுதி அஞ்சலி செலுத்தி நல்லடக்கம் செய்தனர். முருகேசனின் மனைவி ஏற்கனவே இறந்து விட்ட நிலையில், அவருக்கு பிள்ளைகளும் இல்லை. உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். வயது முதிர்வு காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


உறவினர் யாரும் இல்லாத நிலையில், அவரது உடலை தங்கள் உறவாக கருதி மை தருமபுரி அமைப்பினர் தருமபுரி பச்சையம்மன் கோவில் மயானத்தில் இறுதி அஞ்சலி செலுத்தி நல்லடக்கம் செய்தனர். இந்த நிகழ்வில் மை தருமபுரி அமைப்பின் நிறுவனத் தலைவர் சதீஸ் குமார் ராஜா, தன்னார்வலர்கள் கணேஷ், கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்.


மை தருமபுரி அமைப்பின் அமரர் சேவை மூலம் இதுவரை 194 ஆதரவற்ற மற்றும் ஏழ்மையில் உயிரிழந்தவர்களின் புனித உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஆதரவற்றோருக்கு உறவாக மை தருமபுரி அமைப்பினர் தொடர்ந்து சேவை செய்து வருகின்றனர்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies