தருமபுரி – மார்ச் 21:
தருமபுரி மாவட்ட இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் (UCPI) பென்னாகரம் சட்டமன்ற தொகுதி பேரவை கூட்டம் பென்னாகரம் UCPI அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் பி. இரவி தலைமை தாங்கினார். கூட்டத்தில் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கட்சியின் செயல்திட்டங்கள் குறித்து மாவட்ட செயலாளர் ஜெ. பிரதாபன் விளக்கமாக உரையாற்றினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் ஜி. மாதையன், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் ஜி. சம்பத், பென்னாகரம் தொகுதி பொறுப்பாளர் எம். அழகேசன், முனியப்பன், சங்கர், முருகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
- பென்னாகரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவது குறித்து மாவட்டக்குழுவிற்கு பரிந்துரை செய்து, இறுதி முடிவை மாவட்ட மையம் எடுக்க வேண்டும்.
- ஏரியூர் உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான குடிநீர் பற்றாக்குறையை உடனடியாக தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- யானை, காட்டு பன்றி, மயில், குரங்கு உள்ளிட்ட வனவிலங்குகள் வேளாண்மை நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதை தடுக்க வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பென்னாகரம் தொகுதியில் கல் குவாரிகளுக்கு புதிய அனுமதி வழங்கக்கூடாது; ஏற்கனவே வழங்கப்பட்ட அனுமதிகளையும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி ரத்து செய்ய வேண்டும்.
இந்த தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)