ஒகேனக்கல் - மார்ச். 19:
தமிழக காவிரி கரையோர பகுதிகளில் பெய்த கோடை மழையின் தாக்கத்தால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து திடீரென அதிகரித்து வினாடிக்கு 2000 கனஅடியாக உயர்ந்துள்ளது. கர்நாடகா அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் நீர் அளவு குறைக்கப்பட்டிருந்ததால், கடந்த சில நாட்களாக ஒகேனக்கலில் நீர்வரத்து குறைந்து, நேற்றுவரை வினாடிக்கு 200 கனஅடியாக மட்டுமே நீடித்து வந்தது.
இந்நிலையில், நேற்று மாலை முதல் காவிரி கரையோர பகுதிகளில் ஆங்காங்கே பெய்த கோடை மழையால், ஆற்றில் நீர்வரத்து கணிசமாக அதிகரித்து தற்போது வினாடிக்கு 2000 கனஅடியாக உயர்ந்துள்ளது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மீண்டும் நீர்ப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. முன்னதாக நீர்வரத்து குறைந்ததால் தண்ணீர் கொட்டாமல் இருந்த ஐந்தருவி, சினி ஃபால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட பகுதிகளில் தற்போது தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
நீர்வரத்து திடீரென அதிகரித்துள்ளதால், சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)
.jpg)