Type Here to Get Search Results !

பாலக்கோட்டில் மகாபாரத சொற்பொழிவு நாடகம் துவக்கம்: பந்தகால் நட்டு பூஜை நடைபெற்றது.


பாலக்கோடு - மார்ச். 18:


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு ஸ்ரீ புதூர் மாரியம்மன் கோயில் வளாகத்தில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் மகாபாரத சொற்பொழிவு மற்றும் நாடக நிகழ்ச்சி இந்த ஆண்டும் துவங்கியுள்ளது. இதற்கான பந்தகால் நட்டு பூஜை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.


இந்த நிகழ்ச்சி வழியாக இந்து தர்மத்தின் தாத்பரியங்கள் பொதுமக்களிடம் எடுத்துரைக்கப்பட்டு வருகின்றன. மகாபாரதக் கதையை அடிப்படையாகக் கொண்டு தினமும் சொற்பொழிவுகள் நடைபெற்று, அதைத் தொடர்ந்து நாடக கலைஞர்களின் கூத்து நிகழ்ச்சிகளும் நடைபெறுவது இதன் சிறப்பம்சமாகும்.


இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சிகளில் கிருஷ்ண பகவான் பிறப்பு, அம்பாள்–அம்பிகை திருக்கல்யாணம், பாண்டவர்கள் பிறப்பு, அர்ஜுனன் வில்வளைப்பு, சுபத்திரை கல்யாணம், திரௌபதி துயில், அபிமன்யு போர், கர்ணன் மோட்சம், 18ம் பேர் படுகளம், சொர்க்க வாசல் திறப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் சொற்பொழிவாகவும் நாடகமாகவும் நடைபெற உள்ளன. இந்த நிகழ்ச்சிக்கான துவக்கமாக, கோயில் வளாகத்தில் மேளதாளம் முழங்க அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து பந்தகால் நட்டு விழா நடத்தப்பட்டது.


இந்நிகழ்ச்சியில் ஊர் முக்கிய பிரமுகர்கள், சொற்பொழிவாளர்கள், நாடக கலைஞர்கள் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies