Type Here to Get Search Results !

பென்னாகரம் அருகே பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த சாலையை மீட்டுத் தர வேண்டும் எனக் கோரி சாலை மறியல் போராட்டம்.


பென்னாகரம், மார்ச். 05:


தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் கடமடை கிராமம் அருகே உள்ள முதுகம்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த சாலையை மீட்டுத் தர வேண்டும் எனக் கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சாலையை மீட்டுத் தர வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் நீண்ட நாட்களாக போராடி வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அரசியல் தலைவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.


இதனைத் தொடர்ந்து இன்று காலை திடீரென சாலை மறியல் போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பென்னாகரம் காவல்துறையினர் மற்றும் காவல் அதிகாரிகள் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் மாவட்ட ஆட்சியர் அல்லது வருவாய்த் துறை அதிகாரிகள் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை பொதுமக்கள் முன்வைத்தனர். அதற்கு போலீசார் இணங்காததால், போராட்டம் தீவிரமடைந்தது.



இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை காவல்துறையினர் தூக்கிச் சென்று பேருந்தில் ஏற்றி கைது செய்தனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
📲 சமீபத்திய செய்திகள் உடனுக்குடன் அறிய எங்களை பின்தொடருங்கள்

Facebook: https://www.facebook.com/Thagadurkural

X: https://x.com/thagadurkural

WhatsApp Channel: https://whatsapp.com/channel/0029VaoBeTI1CYoYYJHGr72R

#தகடூர்குரல் #ThagadurKural #தருமபுரி #Dharmapuri #பென்னாகரம் #Pennagaram #RoadProtest #PublicIssue #TamilNews #LocalNews 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies