Type Here to Get Search Results !

பென்னாகரத்தில் ரம்ஜான் ஈகை பெருநாள் தொழுகை: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு.


பென்னாகரம் – மார்ச். 21:


தருமபுரி மாவட்டம் பென்னாகரம் காவேரி ரோடு பகுதியில் அமைந்துள்ள சிறப்பு தொழுகை மைதானத்தில் ரம்ஜான் ஈகை பெருநாள் முன்னிட்டு சிறப்பு தொழுகை மற்றும் துவா நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு ஒருமித்தமாக தொழுகை செய்தனர். ரமலான் மாதம் இறைவனை நெருங்கும் புனித காலமாகவும், நன்மைகள் பெருகும் மாதமாகவும் இஸ்லாமியர்கள் கருதுகின்றனர். இந்த மாதத்தில் நோன்பு இருந்து ஆன்மிக ஒழுக்கத்தை கடைபிடித்து, இறுதியில் ஈகை பெருநாளை கொண்டாடுவது வழக்கமாகும்.


புனித ரமலான் மாதம் நிறைவடைந்ததை தொடர்ந்து, பென்னாகரம் பகுதியில் உள்ள அனைத்து ஜமாத்தார் சார்பில் இன்று ரம்ஜான் பெருநாள் கொண்டாடப்பட்டது. ஜாமியா மஜீத் பள்ளிவாசலில் இருந்து தொடங்கிய ஊர்வலம், பழைய பேருந்து நிலையம் வழியாக முக்கிய வீதிகள் வழியாக சென்று காவேரி ரோடு தொழுகை மைதானத்தை அடைந்தது. அங்கு நடைபெற்ற சிறப்பு தொழுகையின் முடிவில், உலக அமைதி நிலைக்க, விவசாயம் செழிக்க, பேரிடர்கள் நீங்க வேண்டி சிறப்பு துவா செய்யப்பட்டது.


நிகழ்வில் குழந்தைகள், இளைஞர்கள், முதியவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் புத்தாடைகள் அணிந்து கலந்து கொண்டு, ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி ரம்ஜான் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies