தருமபுரி – மார்ச் 21:
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2026 ஐ முன்னிட்டு, தேர்தல் பணிகள் சுமூகமாகவும், நேர்மையாகவும் நடைபெறுவதற்காக இந்திய தேர்தல் ஆணையம் தருமபுரி மாவட்டத்திற்கு பொது பார்வையாளர்கள், செலவின பார்வையாளர்கள் மற்றும் காவல்துறை பார்வையாளர்களை நியமித்துள்ளது. தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளுக்கான பொது பார்வையாளர்களாக வெளிமாநிலங்களைச் சேர்ந்த IAS அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பொது பார்வையாளர்கள்:
- தருமபுரி & பாப்பிரெட்டிப்பட்டி: டாக்டர் அமிதாப் கௌஷல், IAS
- பாலக்கோடு & பென்னாகரம்: திருமதி வந்தனா வைத்யா, IAS
- அரூர் (தனி): பரம்வீர் சிங், IAS
செலவின பார்வையாளர்கள்:
- தருமபுரி & பாப்பிரெட்டிப்பட்டி: ஆனந்த் கே. நாகராலே, IRS
- பாலக்கோடு & பென்னாகரம்: வி.ஆர். ஹரி, IRS
- அரூர்: பட் ரவீஷ் வீரேந்திரபாய், IRS
காவல்துறை பார்வையாளர்:
- அனைத்து 5 தொகுதிகளுக்கும்: டாக்டர் குல்வந்த் சிங், IPS
இவர்கள் தங்கியுள்ள இடங்கள் மற்றும் தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் தேர்தல் தொடர்பான புகார்கள் மற்றும் தகவல்களை நேரடியாகவும் அல்லது தொலைபேசி மூலமாகவும் தெரிவிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும், குறிப்பிட்ட நேரங்களில் பார்வையாளர்களை நேரில் சந்திக்கும் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)