தருமபுரி – மார்ச். 20:
தருமபுரி மாவட்டம் எர்ரப்பட்டி பகுதியில் உள்ள சேவாலயா முதியோர் இல்லத்தில் ரம்ஜான் திருநாள் விழா ஆன்மிக நெகிழ்வுடன் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் ரமலான் நோன்பின் முக்கியத்துவம் குறித்து விளக்கப்பட்டது. திருக்குர்ஆனின் இரண்டாம் அத்தியாயம் (வசனம் 183) படி, நோன்பு மனிதனை ஒழுக்கம் மற்றும் தூய்மைக்குக் கொண்டு செல்லும் என்பதையும் எடுத்துரைக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக மஸ்ஜித்-இ-அக்ஸா வள்ளுவர் நகர் ஹஸ்ரத் எம். இம்ரான், மை தருமபுரி அமைப்பின் நிறுவனத் தலைவர் சதீஸ் குமார் ராஜா, அமைப்பாளர் அ. சையத் ஜாபர் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவின் ஒரு பகுதியாக சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. சேவாலயா முதியோர் இல்ல காப்பக நிர்வாகி சுதாகர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.
இந்த நிகழ்வு முதியோர்களுக்கு ஆன்மிக உற்சாகத்தை அளித்ததுடன், சமூக ஒற்றுமையையும் வெளிப்படுத்தியது.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)