பென்னாகரம் – மார்ச். 19:
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு நடைபெற்று வரும் வாகன சோதனையில், தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியில் இரண்டு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.2,31,150 பணம் மற்றும் 706 கிராம் வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், நிலையான பறக்கும் படை குழுவினர் மற்றும் போலீசார் இணைந்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். உரிய ஆவணங்கள் இன்றி ரூ.50,000க்கு மேல் பணம் கொண்டு செல்லப்படுவது கண்டறியப்பட்டால் அவை பறிமுதல் செய்யப்படுகிறது.
அதன்படி, ஒகேனக்கல் – ஆலம்பாடி சோதனைச் சாவடியில் வன அலுவலர் சிவரஞ்சனி தலைமையிலான குழுவினர் நடத்திய சோதனையில், தருமபுரி கே.வி.ரத்தினம் தெருவைச் சேர்ந்த குணசேகரன் என்பவர் மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற ரூ.1,62,800 பணம் மற்றும் 706 கிராம் வெள்ளி பொருட்கள் உரிய ஆவணங்கள் இன்றி இருப்பது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
அதேபோல், நாகதாசம்பட்டி பிரிவு சாலையில் நடைபெற்ற மற்றொரு சோதனையில், கூத்தப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பாலாஜி என்பவர் காரில் கொண்டு சென்ற ரூ.68,350 பணம் உரிய ஆவணங்கள் இன்றி இருந்ததால் பறிமுதல் செய்யப்பட்டது. இரண்டு இடங்களில் பறிமுதல் செய்யப்பட்ட மொத்தம் ரூ.2,31,150 பணம் மற்றும் 706 கிராம் வெள்ளி பொருட்கள் தேர்தல் நடத்தும் அலுவலர் பாபு மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆறுமுகம் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)