அரூர் - மார்ச். 18:
தருமபுரி மாவட்டம் அரூரில், திராவிடர் கழக மகளிர் அணி மற்றும் மகளிர் பாசறை சார்பில், உலக மகளிர் தினத்தையும் அன்னை மணியம்மையார் 107ஆம் ஆண்டு பிறந்தநாளையும் முன்னிட்டு சிறப்புவிழா நடைபெற்றது.
அரூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் இராஜேந்திரன் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட மகளிர் அணி தலைவர் ஆர். மணிமேகலை தலைமை தாங்கினார். மாவட்ட மகளிர் பாசறை தலைவர் பெ. கல்பனா வரவேற்புரை நிகழ்த்தினார். மகளிர் அணி பொறுப்பாளர்கள் வேப்பிலைப்பட்டி சுசிலா, கலா, வேளாங்கண்ணி, ஜான்சிராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
📌 நிகழ்ச்சி சிறப்பம்சங்கள்:
-
மாநில மகளிர் அணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி மற்றும் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் அரூர் சா. இராஜேந்திரன் ஆகியோர் இணைந்து அன்னை மணியம்மையார் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தனர்.
-
“அன்னை மணியம்மையார் வாழ்க” என்ற முழக்கங்களுடன் நிகழ்ச்சி உற்சாகமாக நடைபெற்றது.
-
வருகை தந்த அனைவருக்கும் பெ. உமா மற்றும் விடுதலை வாசகர் ஜெபமணி இனிப்பு வழங்கினர்.
🗣️ கருத்தரங்கம்:
அன்னை மணியம்மையார் பிறந்தநாளும் உலக மகளிர் தினமும் முன்னிட்டு நடைபெற்ற கருத்தரங்கத்திற்கு, பெரியார் பெருந்தொண்டர் மற்றும் மாவட்ட பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற தலைவர் கவிஞர் கண்ணிமை தலைமை தாங்கினார்.
இந்த கருத்தரங்கில் பல்வேறு தலைப்புகளில் உரைகள் நிகழ்த்தப்பட்டன:
-
“தந்தை பெரியாரை பாதுகாத்த அன்னை மணியம்மையார்” – தகடூர் தமிழ்ச்செல்வி
-
“பெண்ணுரிமை போராளி தந்தை பெரியார்” – இயக்குநர் மாரி கருணாநிதி
-
“பாரதிதாசன் பார்வையில் பெண்கள்” – கவிஞர் கீரை பிரபாகரன்
-
“உலகை ஆளும் பெண்ணினம்” – ஆசிரியர் ச. அறிவுமணி
-
“பெண்களின் நிலை அன்றும் இன்றும்” – ஆசிரியர் ஆ. நாகராஜ்
-
“சமுதாய முன்னேற்றத்தில் மகளிர் பங்கு” – கவிஞர் சுதாகர்
-
“நகைச்சுவையே நல்மருந்து” – ஆசிரியர் அரசு
-
“மகளிர் உரிமையும் திராவிட ஆட்சி” – கவிஞர் மு. பிரேம்குமார்
நிகழ்ச்சியில் தலைமை கழக ஒருங்கிணைப்பாளர் ஊமை ஜெயராமன் நிறைவுரையாற்றினார்.
இறுதியாக, மாவட்ட மகளிர் அணி செயலாளர் பெ. உமா சமூக சிந்தனை பாடல்களை பாடி நன்றி தெரிவித்தார்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)