Type Here to Get Search Results !

தருமபுரி மாவட்டத்தில் ரூ.107.5 இலட்சத்தில் வேளாண் வசதிகளுடன் உழவர் நல சேவை மையம் துவக்கம். – மாவட்ட ஆட்சியர் தகவல்.


தருமபுரி, மார்ச். 05:


தருமபுரி மாவட்டத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் சார்பில் ரூ.107.5 இலட்சம் மதிப்பீட்டில் உலர் களம், உலர் களங்களுடன் கூடிய சிப்பம் கட்டும் கூடம் மற்றும் முதலமைச்சரின் உழவர் நல சேவை மையம் உள்ளிட்ட வசதிகள் அமைக்கப்பட்டுள்ளதாக தருமபுரி மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஸ் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள தகவலில் கூறியதாவது:

  • 2021–2022 ஆம் ஆண்டில் ரூ.10.5 இலட்சம் மதிப்பீட்டில் உலர் களம் அமைக்கப்பட்டு 1,290 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

  • 2022–2023 ஆம் ஆண்டில் ரூ.42 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட உலர் களங்கள் மூலம் 932 விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர்.

  • 2023–2024 ஆம் ஆண்டில் ரூ.34 இலட்சம் மதிப்பீட்டில் உலர் களங்களுடன் கூடிய சிப்பம் கட்டும் கூடம் அமைக்கப்பட்டு 520 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

  • 2024–2025 ஆம் ஆண்டில் ரூ.1.40 இலட்சம் மதிப்பீட்டில் உலர் களங்களுடன் கூடிய சிப்பம் கட்டும் கூடம் அமைக்கப்பட்டு 365 நபர்கள் பயன்பெற்றுள்ளனர்.


மேலும் 2025–2026 ஆம் ஆண்டில் முதலமைச்சரின் உழவர் நல சேவை மைய திட்டத்தின் கீழ் ரூ.12 இலட்சம் மதிப்பீட்டில் 2 உழவர் நல சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதே ஆண்டில் ரூ.7.60 இலட்சம் மதிப்பீட்டில் உலர் களங்களுடன் கூடிய சிப்பம் கட்டும் கூடமும் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


இந்த வசதிகள் மூலம் விவசாயிகள் தங்களது விளைபொருட்களை உலர்த்தி பாதுகாப்பாக சேமித்து விற்பனை செய்யும் வசதி கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


#தகடூர்குரல் #ThagadurKural #தருமபுரி #Dharmapuri #AgricultureNews #Farmers #Uzhavar #TamilNaduAgriculture #DistrictNews #TamilNews 


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

📲 சமீபத்திய செய்திகள் உடனுக்குடன் அறிய எங்களை பின்தொடருங்கள்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies