Type Here to Get Search Results !

பாலக்கோட்டில் ஒன்றிய அரசை கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


தருமபுரி - மார்ச் 14:


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திமுக மாவட்ட பொருளாளர் எம்.எம். முருகன் தலைமையேற்றார். பேரூராட்சி தலைவர்கள் பி.கே. முரளி, எம்.ஏ. வெங்கடேசன், ஒன்றிய செயலாளர்கள் முனியப்பன், அன்பழகன், ஆனந்தன், தொகுதி பொறுப்பாளர் அரியப்பன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு தேவையான வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தவில்லை என்றும், மாநிலத்திற்கு வழங்க வேண்டிய நிதியை வழங்காமல் வஞ்சித்து வருவதாகவும் குற்றம்சாட்டினர். மேலும் கேஸ் சிலிண்டர் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டால் வியாபாரிகள் முதல் அடித்தட்டு மக்கள்வரை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நிர்வாக திறனற்ற பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என்றும் கோஷங்கள் எழுப்பி கண்டனத்தை பதிவு செய்தனர்.


இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, தேமுதிக, கொமதேக, கம்யூனிஸ்ட் கட்சிகள், தவாக, தமமுக உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் உள்ள கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies