Type Here to Get Search Results !

மை தருமபுரி அறக்கட்டளை – அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் சார்பில் நீர்மோர் வழங்கும் சேவை தொடக்கம்.


தருமபுரி - மார்ச் 15:


தருமபுரி மாவட்ட அரசு மருத்துவமனை எதிரில், மை தருமபுரி அறக்கட்டளை மற்றும் அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் சார்பில் பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கும் சேவை தொடங்கப்பட்டது. கடந்த ஆறு ஆண்டுகளாக மை தருமபுரி அமைப்பின் சார்பில் “பசிக்குதா வாங்க சாப்பிடுங்க” என்ற திட்டத்தின் மூலம் தினந்தோறும் அன்னதானம் வழங்கும் சேவை நடைபெற்று வருகிறது. இந்த சேவை தொடர்ந்து நடைபெற பல நல்ல உள்ளங்களின் ஆதரவும், பல்வேறு அமைப்புகளின் ஒத்துழைப்பும் முக்கிய காரணமாக அமைந்துள்ளது.


இந்த ஆண்டு மார்ச் மாதம் முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்களுக்கு தாகநீர் வழங்கும் நோக்கில் அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் சார்பில் தினந்தோறும் நீர்மோர் வழங்கும் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகளின் உறவினர்கள், பொதுமக்கள் மற்றும் பசியுடன் வரும் நபர்களுக்கு மதிய அன்னதானத்துடன் நீர்மோரும் வழங்கப்படுகிறது.


இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தருமபுரி STS ஜீவல்லரி நிர்வாக இயக்குநர் சுரேஷ் பாபு கலந்து கொண்டார். மேலும் அகில பாரத ஐயப்பா சேவா சங்க செயலாளர் செந்தில்குமார், மை தருமபுரி அமைப்பின் நிறுவனத் தலைவர் சதீஸ் குமார் ராஜா, தன்னார்வலர்கள் கணேஷ், காதர் ஆகியோர் நீர்மோர் வழங்கும் சேவையை ஒருங்கிணைத்தனர்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies