Type Here to Get Search Results !

பாலக்கோடு புதூர் மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ.6.92 லட்சம் காணிக்கை பக்தர்களால் செலுத்தப்பட்டுள்ளது.


பாலக்கோடு - மார்ச். 17:


தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் உள்ள ஸ்ரீ புதூர் மாரியம்மன் கோயிலின் உண்டியலில் ரூ.6 லட்சத்து 92 ஆயிரத்து 326 காணிக்கை பக்தர்களால் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கோயில் ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் பிரசித்தி பெற்ற ஆலயமாகும். இங்கு ஆண்டுதோறும் மாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, பிப்ரவரி 23 முதல் 27ஆம் தேதி வரை விமர்சையாக நடைபெற்றது.


இந்த திருவிழாவில் பாலக்கோடு சுற்றுவட்டாரப் பகுதிகளான பனங்காடு, மேல்தெரு, புதூர், கல்கூடப்பட்டி, குப்பன்கொட்டாய், வாழைத்தோட்டம், செங்கோடப்பட்டி, மணியகாரன் கொட்டாய், ரெட்டியூர், சித்திரப்பட்டி, காவாப்பட்டி உள்ளிட்ட 12 கிராமங்களைச் சேர்ந்த மக்களும், மேலும் வெளியூர் மற்றும் வெளிமாவட்டங்களைச் சேர்ந்தோர் என சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


திருவிழாவைத் தொடர்ந்து பக்தர்கள் செலுத்திய காணிக்கைகளை கணக்கிடும் பணி, ஹிந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் கோமதி தலைமையில் நடைபெற்றது. உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டதில் மொத்தம் ₹6,92,326 வசூலாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies