Type Here to Get Search Results !

வீட்டில் புகுந்த 10 அடி நீள சாரைபாம்பை தீயணைப்பு வீரர்கள் லாவகமாக பிடித்து, வனப்பகுதியில் விட்டனர்.


பாலக்கோடு - மார்ச். 17:


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள எண்டப்பட்டி கிராமத்தில், வீட்டுக்குள் புகுந்த சுமார் 10 அடி நீளமுள்ள சாரைபாம்பை தீயணைப்பு வீரர்கள் லாவகமாக பிடித்து பாதுகாப்பாக வனத்துறைக்கு ஒப்படைத்தனர். எண்டப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செல்வகுமார் இன்று மாலை தனது வீட்டில் உள்ள குளிர்சாதன பெட்டியை திறக்க சென்றபோது, அதன் கீழ்பகுதியில் பாம்பு பதுங்கியிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே வீட்டிலிருந்து வெளியேறி பாலக்கோடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.


தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், பாம்பை எவ்வித ஆபத்தும் இல்லாமல் லாவகமாக பிடித்து சாக்குப் பையில் அடைத்தனர். பின்னர் பிடிபட்ட பாம்பை பாலக்கோடு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். ஆய்வு செய்த வனத்துறையினர், அது சுமார் 10 அடி நீளமுள்ள சாரைபாம்பு என தெரிவித்தனர். அதனை தொடர்ந்து அந்த பாம்பை பாதுகாப்பாக பிக்கிலி காப்புக் காட்டில் விடுவிக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies