Type Here to Get Search Results !

அமமுக கட்சியின் தருமபுரி சட்டமன்ற தொகுதி ஊராட்சி வார்டு செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தருமபுரி, மார்ச் 4:


தருமபுரி மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில், தருமபுரி சட்டமன்ற தொகுதி ஊராட்சி வார்டு செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் டி.கே. ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், கட்சி வளர்ச்சி பணிகள் மற்றும் வரவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தல் தொடர்பான பணிகள் குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

இந்த கூட்டத்தில் அமமுக சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு பிரிவு மாநில செயலாளர் ஆர். பாலு, மாவட்ட துணை செயலாளர் சங்கீதா, தருமபுரி நகர செயலாளர் எஸ். பார்த்திபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் ஒன்றிய செயலாளர்கள் பி.டி. கணேசன், டி.எம். பெரியசாமி, எஸ். பாஸ்கர், எம். மகேந்திரவர்மன், சார்பு அமைப்பு மாவட்ட செயலாளர்கள் எம். கிருஷ்ணன், டி.எம். கோகுல்ராஜ், டி. ராமன், டி.கே. மாது, எம். வேலாயுதம், ஆர். மாரிமுத்து, ஜி. கார்த்திகேயன் மற்றும் தருமபுரி சட்டமன்ற தொகுதி பொதுக்குழு உறுப்பினர் டி.கே.ஆர். ரமேஷ் குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


இதில் தருமபுரி சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த ஊராட்சி மற்றும் வார்டு செயலாளர்கள் பலரும் பங்கேற்றனர்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies