தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளியில் ₹90 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பேரூராட்சி அலுவலக புதிய கட்டிடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். பேரூராட்சி மூலதன மானிய நிதியிலிருந்து ₹90 லட்சம் செலவில் கட்டப்பட்ட இந்த புதிய கட்டிடம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பேரூராட்சி தலைவர் எம்.ஏ. வெங்கடேசன் குத்துவிளக்கு ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சிகள் உதவி இயக்குநர் கணேஷ், செயல் அலுவலர் திருமூர்த்தி, தலைமை எழுத்தர் சம்பத், துணை தலைவர் கார்த்திகா, கவுன்சிலர்கள் கீதா வடிவேல், லட்சுமி முனிராஜ், யதிந்தர், கார்த்திகேயன், ரீனா குழந்தைவேல், புவனேஸ்வரி மணிகண்டன், அபராமி காந்தி, சிவக்குமார், சுகந்தி ரமேஷ், வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் பேரூராட்சி ஊழியர்கள், திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலரும் பங்கேற்றனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)