பாலக்கோடு - மார்ச். 20:
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு நடைபெற்று வரும் வாகன சோதனையில், தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் பறக்கும் படையினர் ரூ.1,51,700 ரொக்கத்தை பறிமுதல் செய்தனர். பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வெலாங்காடு பிரிவு சாலை மற்றும் ஆரதஅள்ளி கூட்ரோடு பகுதிகளில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
வெலாங்காடு பிரிவு சாலையில் நடத்தப்பட்ட சோதனையில், கர்நாடகா மாநிலம் பெங்களூரு ககனகபுரா பகுதியைச் சேர்ந்த பகத் பாஷா (33) என்பவர் சொகுசு காரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த ரூ.92,700 பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல், ஆரதஅள்ளி கூட்ரோடு பகுதியில் நடைபெற்ற சோதனையில், மாரண்டஅள்ளி அருகே சாஸ்திரமுட்லு பகுதியைச் சேர்ந்த ரவி (51) என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த ரூ.59,000 பறிமுதல் செய்யப்பட்டது.
இதனால், இரு இடங்களில் பறிமுதல் செய்யப்பட்ட மொத்தம் ரூ.1,51,700 தொகை, தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அசோக்குமாரிடம் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் பாலக்கோடு சார்நிலை கருவூலத்தில் செலுத்தப்பட்டது.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)