Type Here to Get Search Results !

பாலக்கோடு அருகே சோதனைச் சாவடியில் ரூ.38.59 லட்சம் பறிமுதல் – மாவட்ட ஆட்சியர் சதீஸ் நேரில் ஆய்வு.


தருமபுரி - மார்ச். 16:


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காடுசெட்டிபட்டி சோதனைச் சாவடியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ₹38 லட்சத்து 59 ஆயிரத்து 500 ரொக்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


தாசில்தார் அசோக்குமார் தலைமையிலான தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, பெங்களூரிலிருந்து பாலக்கோடு நோக்கி வந்த 5 சொகுசு கார்களை நிறுத்தி சோதனை செய்தனர்.


அதில் தருமபுரி மாக்கனூர் பகுதியைச் சேர்ந்த வீரமணி, அரூர் பகுதியைச் சேர்ந்த ரூபா, அளேசீபம் பகுதியைச் சேர்ந்த சர்தார் உள்ளிட்ட 5 பேர் பயணம் செய்த வாகனங்களில் உரிய ஆவணங்கள் இன்றி பணம் கொண்டு வரப்பட்டதாக தெரியவந்தது. சோதனையில் முறையே ₹1.52 லட்சம், ₹99,000, ₹35 லட்சம், ₹1,08,500 உள்ளிட்ட தொகைகள் சேர்த்து மொத்தம் ₹38,59,500 ரொக்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் பொருட்கள் உதவி தேர்தல் அலுவலர் செல்வி அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.


தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த முதல் நாளிலேயே சுமார் ₹40 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் பாலக்கோடு தாசில்தார் அலுவலகத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.


அப்போது உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பணத்தை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதுடன், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்ட வாகனங்கள் ஒரே இடத்தில் நிற்காமல் தொடர்ந்து நகர்ந்து கொண்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies