Type Here to Get Search Results !

மனித நேய மக்கள் கட்சி சார்பில் தருமபுரியில் இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.


தருமபுரி - மார்ச். 15:


மனித நேய மக்கள் கட்சி சமூக நல்லிணக்க மேடை சார்பில் இப்தார் நிகழ்ச்சி தருமபுரி வணிகர் மஹாலில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மனித நேய மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் என். சுபேதார் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஏ. நியாஸ் வரவேற்றார். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளர் டி.பி. பைரோஸ், மனித நேய மக்கள் கட்சி மாவட்ட பொருளாளர் எம். இதாயத்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாநில செயலாளர் ஏ. அல்தாப் அஹ்மத், திமுக தருமபுரி மேற்கு மாவட்ட பொறுப்பாளர் முனைவர் பி. பழனியப்பன், தருமபுரி மறைமாவட்ட ஆயர் முனைவர் லாரன்ஸ் பயஸ், திமுக முன்னாள் மாவட்ட செயலாளர் பெ. தடங்கம் சுப்பிரமணி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக தலைமை பிரதிநிதி ஒய். சாதிக் பாஷா, காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் கோ.வி. சிற்றரசு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஏ. குமார், மாவட்ட செயலாளர் இரு. சிசுபாலன், மதிமுக மாவட்ட செயலாளர் ஜி. இராமதாஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ். கலைசெல்வம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கருத்தியல் பரப்பு மாநில செயலாளர் பொ.மு. நந்தன், தருமபுரி சட்டமன்ற தொகுதி மாவட்ட செயலாளர் த.கு. பாண்டியன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் ஏ. சீராஜுதீன் உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றினர். இதனைத் தொடர்ந்து இப்தார் நோன்பு திறக்கும் விருந்து வழங்கப்பட்டது.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies