Type Here to Get Search Results !

தேர்தல் நடத்தை விதிகள் அமல்: துப்பாக்கிகளை காவல் நிலையங்களில் ஒப்படைக்க ஆட்சியர் அறிவுறுத்தல்.


தருமபுரி - மார்ச். 16:


தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2026 அறிவிப்பு வெளியாகி, தேர்தல் நடத்தை விதிகள் 15.03.2026 அன்று பிற்பகல் முதல் அமலுக்கு வந்துள்ளன. இதனால் பொதுமக்கள் படைக்கலன்களை வைத்திருப்பதும், எடுத்துச் செல்வதும் தொடர்பாக தடையாணை நடைமுறைக்கு வந்துள்ளது. இதையடுத்து தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து படைக்கல உரிமதாரர்களும் தங்களுடைய துப்பாக்கிகளை உள்ளிட்ட படைக்கலன்களை தங்களது இருப்பிடத்திற்கு அருகில் உள்ள காவல் நிலையங்களில் பாதுகாப்பாக ஒப்படைத்து, அதற்கான உரிய ஒப்புதல் சீட்டை பெற்றுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


மேலும் தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வரும் தினத்திலிருந்து ஒரு வாரத்திற்கு பின்னர் உரிமையாளர்கள் தங்களது துப்பாக்கி உள்ளிட்ட படைக்கலன்களை மீண்டும் பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies